எவரது பிரஜாவுரிமையையும் பறிக்க அரசு தலையிடாது - பொய் வதந்திகளுக்கு அமைச்சர் ரமேஷ் பதில் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

எவரது பிரஜாவுரிமையையும் பறிக்க அரசு தலையிடாது - பொய் வதந்திகளுக்கு அமைச்சர் ரமேஷ் பதில்

எந்தவொருவரினதும் பிரஜா உரிமையை பறிக்கவோ அல்லது அது தொடர்பான சட்டங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கமோ அமைச்சரவையோ தலையிடாது என பொறுப்புடன் கூறுவதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பரிசீலித்த பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் பிரஜா உரிமையை பறிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி பதிலளித்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் சமூகத்தில் பல்வேறு கருத்துகள் பரப்படுகின்றன. 700 பக்கங்களுக்கும் அதிகமான இந்த அறிக்கை கடந்த முதலாம் திகதி ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்து. இதன் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கு 3 வாரம் செல்லும். நேற்று அமைச்சரவைக்கு இது கையளிக்கப்பட்டது.

விரைவில் பாராளும்றத்திற்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமா அதிபருக்கும் வழங்கப்பட இருக்கிறது. சட்ட ரீதியான நடவடிக்கை சட்டமா அதிபரினூடாக முன்னெடுக்கப்படும் எந்த அரசியல் அழுத்தமும் தலையீடும் இடம்பெறாது என்றும் அவர் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad