வீதியை விட்டு மரத்தில் மோதிய அமைச்சர் அருந்திகவின் வாகனம் - சாரதி உள்ளிட்ட மூவர் காயம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

வீதியை விட்டு மரத்தில் மோதிய அமைச்சர் அருந்திகவின் வாகனம் - சாரதி உள்ளிட்ட மூவர் காயம்

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ பயணித்த வாகனமொன்று இன்று (20) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

சிலாபம் - ஆனமடுவ வீதியில், பல்லம பிரதேசத்திலுள்ள சேருகெலே எனும் இடத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் வாகனத்தின் சாரதி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆயினும், விபத்தில் அமைச்சர் அருந்திக பெனாண்டோவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதி உள்ளிட்ட காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment