உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையின் பிரதி ஒன்றை கோருகிறார் பேராயர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையின் பிரதி ஒன்றை கோருகிறார் பேராயர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார். 

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பேராயரின் ஊடக பேச்சாளர் பேராசிரியர் கமிலஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் அறியப்படுத்தப்பட வேண்டியது அவசியமானதாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad