மேற்குலக நாடுகள், புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு எதிராக சதித்திட்டம் என்கிறார் அமைச்சர் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Sunday, February 7, 2021

மேற்குலக நாடுகள், புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு எதிராக சதித்திட்டம் என்கிறார் அமைச்சர் வீரசேகர

இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் மற்றும் மேற்கத்தைய நாடுகள் இணைந்து சதித்திட்டங்களை மேற்கொள்வதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார். 

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச ஊழியர்களை உயர் பதவிகளில் இருந்து நீக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் பரிந்துரைத்திருந்தார் .

அத்துடன், பொறுப்புக் கூறலை பலப்படுத்தி உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு விடயத்தில் மறுசீரமைப்புகளை அமுல்படுத்துமாறும் சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்றாற் போன்ற புதிய சட்டம் மாற்றீடு செய்யப்படும் வரை கைது நடவடிக்கைகளில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த தடை விதிக்குமாறும் பரிந்துரைத்திருந்தார்.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் மற்றும் மேற்கத்தைய நாடுகள் இணைந்து சதித்திட்டங்களை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment