ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணையை வழிமறித்து அழித்தது சவுதி கூட்டுப்படைகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 18, 2021

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணையை வழிமறித்து அழித்தது சவுதி கூட்டுப்படைகள்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஏவுகணையை சவுதி கூட்டுப்படைகள் வழிமறித்து அழித்து உள்ளதாக சவுதியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

யமன் நாட்டில் அந்த நாட்டின் அதிபர் அப்திரப்பு மன்சூர் ஹாதியின் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் 2014ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்கதை போல நீண்டு வருகிறது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நிதி உதவியும், ஆயுத உதவியும் அளித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

அதே நேரத்தில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக 2015ஆம் ஆண்டு முதல் சவுதி கூட்டுப்படைகள் களம் இறங்கி சண்டைபோட்டு வருகின்றன.

யமன் நாட்டின் வடக்கு பகுதியில் பெரும்பாலான இடங்களை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசப்படுத்தி உள்ளனர். அந்த நாட்டின் தலைநகர் சனாவும் அவர்கள் வசமே உள்ளது. 

அதிபர் படைகளுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள சவுதியை பழிவாங்கும் விதமாக அந்த நாட்டின் மீது அவ்வப்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதியின் தென்மேற்கு நகரமான காமிஸ் முஷாய்ட் நகரை நோக்கி நேற்று முன்தினம் ஏவிய ஏவுகணையை சவுதி கூட்டுப்படைகள் வழிமறித்து அழித்து உள்ளதாக சவுதியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment