வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Monday, February 15, 2021

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் இன்று (திங்கட்கிழமை) மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அவர்களில் 5 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 416 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டபோதே குறித்த 06 பேருக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் மன்னாரில் அடையாளம் காணப்பட்டவர்கள் 5 பேரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புடையோர் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 377 பேரின் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad