மட்டு. மாநகர சபை ஊழியருக்கு கொரோனா - 20 பேர் தனிமைப்படுத்தலில்! - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

மட்டு. மாநகர சபை ஊழியருக்கு கொரோனா - 20 பேர் தனிமைப்படுத்தலில்!

மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதான கணக்காளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மாநகர சபையின் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

திருமண நிகழ்வொன்றில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அதில் பங்குகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் மாநகர சபையின் பிரதான கணக்காளர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

ஆதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபை மக்கள் சேவைகள் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் 93 ஊழியர்கள், உத்தியோகத்தர்களுக்கு பீசிஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ள பொலிஸார் அது தொடர்பான சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad