கிழக்கில் 16 கொரோனா மரணங்கள், தொற்றாளர்களின் எண்ணிக்கை 2500 கடந்தது - News View

About Us

About Us

Breaking

Sunday, February 7, 2021

கிழக்கில் 16 கொரோனா மரணங்கள், தொற்றாளர்களின் எண்ணிக்கை 2500 கடந்தது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கிழக்கு மாகாணத்தில் இதுவரை 16 மரணங்கள் சம்பவித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 10 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 பேரும் என இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை ஒலுவில் சம்மாந்துறை சாய்ந்தமருது நாவிதன்வெளி உஹனை காத்தான்குடி மட்டக்களப்பு வவுணதீவு ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களாகும்.

சாய்ந்தமருதில் 04 மரணங்கள் சம்பவித்துள்ளன.

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை வரை கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2517 என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்து விட்டதாகவும் சுகாதாரப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment