கட்டுமான பணியின்போது மண்மேடு சரிவு - சிக்கிய இருவர் மீட்பு - இராஜகிரிய பகுதியில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 17, 2021

கட்டுமான பணியின்போது மண்மேடு சரிவு - சிக்கிய இருவர் மீட்பு - இராஜகிரிய பகுதியில் சம்பவம்

இராஜகிரிய பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கிய இரண்டு கட்டுமானத் தொழிலாளர்கள் அதிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இராஜகிரிய, கலபலுவாவ, அக்கொன வீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமான பகுதிக்கு அருகே காணப்பட்ட மண்மேடு சரிந்ததில் குறித்த இருவரும் அதில் சிக்குண்டிருந்தனர்.

இன்று (17) காலை சுவரொன்றை கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அதற்கு அருகிலிருந்து மண் மேடு சரிந்து வீழ்ந்து இவ்வனர்த்தம நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, மீட்கப்பட்ட இருவரின் நிலைமை மோசமாக இல்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment