ஐ.நாவின் புதிய பிரேரணைக்கான முன்மொழிவு வரைபை தயாரிப்பது குறித்து இணக்கப்பாடு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

ஐ.நாவின் புதிய பிரேரணைக்கான முன்மொழிவு வரைபை தயாரிப்பது குறித்து இணக்கப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று தமிழ்க் கட்சிகளும் இணைந்து ஐ.நாவின் புதிய பிரேரணைக்கான முன்மொழிவு வரைபை தயாரிப்பது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே இதுகுறித்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

முன்மொழிவு வரைபைத் தயாரிக்க மூவர் அடங்கிய குழுவும் இதன்போது நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் அதன் முக்கியஸ்தர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பாக்கியசோதி சரவணமுத்து தலைமையில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment