பொத்துவில், தணமல்வில பிதேசங்களில் கஞ்சாச் சேனைகள் சுற்றிவளைப்பு - பல்லாயிரக் கணக்கான செடிகள் அழிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 3, 2021

பொத்துவில், தணமல்வில பிதேசங்களில் கஞ்சாச் சேனைகள் சுற்றிவளைப்பு - பல்லாயிரக் கணக்கான செடிகள் அழிப்பு

பொத்துவில், பக்மிட்டியாவ பிரதேசத்தில் நேற்று (02), பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 ஏக்கர் கஞ்சாச் சேனையை மீட்டுள்ளனர்.

குறித்த சேனையை மேற்கொண்ட சந்கேதநபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG அஜித் ரோஹண, குறித்த சந்தேகநபர்களை கைது செய்யும் பொருட்டான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சேனையிலுள்ள அனைத்து கஞ்சா செடிகளும் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இன்று (03) காலை தணமல்வில, கல்கொட்டுகந்த பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 3 கஞ்சா சேனைகள் மற்றும் 2 கஞ்சா வளர்ப்பு மேடைகள் மீட்கப்பட்டதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்போது, 17,000 கஞ்சாச் செடிகள் மீட்கப்பட்டதாக தெரிவித்த அவர், அவற்றின் மாதிரிகள் பெறப்பட்ட பின்னர் அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில், விசேட அதிரடிப் படையினரால் 3 பேர் கைது செய்யப்பட்டு, தணமல்வில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment