இன்று முதல் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் - ஒரு சில பிரதேசங்கள் விடுவிப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

இன்று முதல் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் - ஒரு சில பிரதேசங்கள் விடுவிப்பு

இன்று (24) பிற்பகல் 6.00 மணி முதல் ஒரு சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (24) பி.ப. 6.00 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவு
நபீர் வத்தை
 
நிட்டம்புவ பொலிஸ் பிரிவு
திஹாரி வடக்கு
திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாரண பன்சல வீதி
கத்தோட்ட வீதி
ஹிஜ்ரா மாவத்தைக்குள் நுழையும் பிரதேசம்

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவு
கல்ஒலுவ கிழக்கு
கல்ஒலுவ மேற்கு

இன்று (24) பி.ப. 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவு

கல்ஒலுவ ஜும்ஆ பள்ளி வீதி
ஹிஜ்ரா மாவத்தை
அலுத் பார (புதிய வீதி)
அக்கரகொட

No comments:

Post a Comment

Post Bottom Ad