காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஏ.எல்.நபீல் நியமனம் - News View

About Us

Add+Banner

Friday, January 1, 2021

demo-image

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஏ.எல்.நபீல் நியமனம்

133370144_2960327170852487_2067190603068019546_o+%2528Small%2529
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஏ.எல்.நபீல் இன்று (1) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஆசாத் ஹசன் தொடர்ந்து கடமையாற்றுகின்றார்.

சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் மீராமுகைதீன் பாலமுனை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் ஏ.எல்.நபீல் பாலமுனை வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தார் என்பதுடன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் இந்த இடமாற்றத்தினை செய்துள்ளது.

மேற்படி டாக்டர் நபீல் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன முன்னாள் தலைவரும் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவருமான சிரேஷ்ட உலமா மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை பலாஹி B.A அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *