நேற்று மாத்திரம் 90 வாகன விபத்துகள் : 9 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Saturday, January 2, 2021

நேற்று மாத்திரம் 90 வாகன விபத்துகள் : 9 பேர் பலி

(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் நேற்று மாத்திரம் 90 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த விபத்துகளில் சிக்கி 7 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 50 பேர் சிறு காயமடைந்துள்ளனர். அதற்கமைய வாகனங்களுக்கு மாத்திரம் சேதம் எற்பட்ட 21 விபத்துகளும் பதிவாகியுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 74 பேர் உயிரிழந்துள்ளதுடன், 149 படுகாயத்துக்கும், 607 பேர் சிறுகாயத்துக்கும் உள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக நேற்று மாத்திரம் 221 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களை வழக்கு விசாரணைக்காக பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். 

கடந்த 13 நாட்களுக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக 2,045 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் வாகனங்கள் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரையிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad