ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு 826 கோடி ரூபா நிதியுதவி - மூன்று முக்கிய விடயங்களுக்கு பயன்படுத்தப்படும் - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு 826 கோடி ரூபா நிதியுதவி - மூன்று முக்கிய விடயங்களுக்கு பயன்படுத்தப்படும்

நாட்டின் நீதித்துறை, உணவு பராமரிப்பு மேம்படுத்தல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் ஏற்படும் நிலைமைகளை கட்டுப்படுத்தல் செயற்திட்டங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 826 கோடி ரூபா நிதியை வழங்கியுள்ளது. 

மேற்படி வேலைத்திட்டங்கள் தொடர்பில் 03 உடன்படிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் கைச்சாத்திட்டுள்ளது. 

அரசாங்கத்தின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் தூதுவர் டெனிஸ் ஷயிப் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார். 

நாட்டின் நீதித்துறையை பலப்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக 416 கோடியையும் உணவு பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தல் வேலைத்திட்டத்திற்காக 231 கோடியையும் நாட்டில் கைத்தொழில் துறையில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் நடவடிக்கைகளுக்காக 179 கோடியையும் ஐரோப்பிய ஒன்றியம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment