இடம்பெயர்ந்த 7,727 பேரின் பெயர்கள் தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணை - News View

Breaking

Post Top Ad

Saturday, January 23, 2021

இடம்பெயர்ந்த 7,727 பேரின் பெயர்கள் தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணை

யுத்தம் காரணமாக வட மாகாணத்திலிருந்து வௌியேறி, வௌி மாவட்டங்களில் வசிப்பவர்களின் பெயர்கள் தேர்தல் இடாப்பிலிருந்து அகற்றப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் தற்காலிகமாக குடியிருக்கும் 7,727 பேரின் பெயர்கள் தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கப்படுவது அநீதியானது என்பதை வலியுறுத்தி ரிஷாட் பதியுதீன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

புத்தளத்தில் தற்காலிகமாகக் குடியிருக்கும் மன்னார் மாவட்ட மக்களின் பெயர்கள் அகற்றப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad