சிம்பாப்வே நாட்டில் ஒரு வாரத்தில் 3 அமைச்சர்கள் கொரோனாவுக்கு பலி - News View

Breaking

Post Top Ad

Saturday, January 23, 2021

சிம்பாப்வே நாட்டில் ஒரு வாரத்தில் 3 அமைச்சர்கள் கொரோனாவுக்கு பலி

சிம்பாப்வே நாட்டில் ஒரு வாரத்தில் மூன்று அமைச்சர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள்.

சிம்பாப்வே நாட்டின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜோயல் மடிசா நேற்று வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஜோயல் மடிசா ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த மூன்றாவது அமைச்சரும், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிம்பாப்வே நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் பதிவாகியதில் இருந்து உயிரிழந்த 3 ஆவது அமைச்சரும் ஆவார்.

தொற்று நோய் நாட்டில் தொடர்ந்து பரவி வரும் நிலையில், புதன்கிழமை வைரஸால் உயிரிழந்த வெளிவிவகார அமைச்சர் சிபுசிசோ மோயோவின் உடல் இன்னும் புதைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனவரி 15 ஆம் திகதி, மணிகலந்து மாகாண இராஜாங்க அமைச்சர் எலன் குவாரட்ஸிம்பா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் சிம்பாப்வேயில் 639 புதிய கொரோானா நோயாளர்கள்ள் பதிவானதை அடுத்து சிம்பாப்வே நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்துள்ளதாக சுகாதார மற்றும் குழந்தை பராமரிப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றால் 962 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad