மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்ட 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் சுகாதார பிரிவினரும், பொலிஸாரும், பொலிஸ் சுற்றுச் சூழல் பிரிவினரும் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கமைய, நேற்று முன்தினம் மாத்திரம் 1311 நிறுவனங்கள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்ததுடன், அதில் 1098 நிறுவனங்கள் மாத்திரமே உரிய விதிமுறைகளை பின்பற்றியிருந்தன.
இதன்போது சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 213 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், முகாமையாளர்கள் உட்பட நிர்வாக பிரிவினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment