சுற்றுலா ஹோட்டல்களின் நிலுவையில் உள்ள மின்சார கட்டணங்களை செலுத்த ஒரு வருட கால அவகாசம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

சுற்றுலா ஹோட்டல்களின் நிலுவையில் உள்ள மின்சார கட்டணங்களை செலுத்த ஒரு வருட கால அவகாசம்

சுற்றுலா ஹோட்டல்களின் நிலுவையில் உள்ள மின்சார கட்டணங்களைச் செலுத்த 2021 டிசம்பர் 31 வரை ஒரு வருட கால அவகாசம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களில் நிலுவைத் தொகை இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்குமாறு மின்வலு எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட்- 19 கொரோனா தொற்று காரணமாக, இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது மற்றும் உள்ளூர் சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான நிலுவை மின்சார கட்டணங்களைச் செலுத்த அமைச்சரவையின் ஒப்புதலுடன் அடுத்த ஆண்டு செப்டெம்பர் வரை வழங்கப்பட்ட சலுகை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு டிசம்பர் 31 வரை ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிவித்தது.

குறித்த ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களது மின்சார கட்டணங்களை ஒரு வருட காலத்திற்குள் தவணை முறையில் இந்நிலுவைக் கட்டணங்களைச் செலுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment