பொலன்னறுவையில் கால்நடை, விவசாயத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

பொலன்னறுவையில் கால்நடை, விவசாயத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

பொலன்னறுவை வேரோடயாய, சின்னவில்பட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஐந்து தலைமுறைகளாக கால்நடை வளர்ப்பிலும் விவசாயத்திலும் ஈடுபட்டுவரும் மக்களை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று (12) தம்பாளை பெரிய பள்ளிவாசலில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அண்மைக் காலமாக அதிகரித்துவரும் நெருக்கடிகளினால் தங்களது இருப்பும், வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள், தாங்கள் முகம் கொடுத்துவரும் பிரச்சினைகளை போதிய ஆதாரங்களுடன் விளக்கிக் கூறினர். 

சட்ட ரீதியான முன்னெடுப்புக்கள் உட்பட அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. 

பாகிஸ்தானுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் சட்டத்தரணி என்.எம். ஷஹீட் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தார்.

தம்பாளை பெரிய பள்ளிவாசல், ரிபாய் பள்ளிவாசல், அல்ஹிலால்புர பள்ளிவாசல் ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட பிரமுகர்கள் பலரும் சுங்காவில் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் சிலரும் பங்குபற்றினர்.

லங்காபுர பிரதேச சபை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் வை.எல். நஜிமுதீன் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் கடந்த புதன்கிழமை (9) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை https://www.facebook.com/1423400127893331/posts/2965386430361352/

No comments:

Post a Comment