யாழ். தென்மராட்சி நுணாவில் A9 வீதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு, 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கிப் பயணித்த கார் ஒன்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் ஆகிய ஐவர் பயணித்துள்ளனர்.
அவர்களில் யோகதாஸ் மகிழன் எனும் 6 வயது சிறுவன் மற்றும் திருமதி ஆன் டேரோளினி (Ann Derolny) எனும் 30 வயதுடைய பெண் ஆகியோர் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஏனையவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆன் மக்கிலியோட் எனும் 6 வயதுச் சிறுவன், தலையில் காயம் காரணமாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேபோனியா எனும் பெண், காயம் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கரோலின் எனும் 35 வயதான பெண், நெற்றி, கைகளில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
(ஐங்கரன் சிவசாந்தன், மயூரப்பிரியன்)
No comments:
Post a Comment