இலவச கொரோனா தடுப்பூசி திட்டம் - துபாயில் இன்று முதல் தொடங்குகிறது - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

இலவச கொரோனா தடுப்பூசி திட்டம் - துபாயில் இன்று முதல் தொடங்குகிறது

நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை சுப்ரீம் கமிட்டி சார்பில் பைசர் பயோ என் டெக் என்ற கொரோனா தடுபூசியானது துபாயில் இலவசமாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை சுப்ரீம் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது அமீரகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. 

இதில் அபுதாபியில் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நல்ல முடிவுகள் பெறப்பட்டதை அடுத்து அபுதாபி, துபாய் உள்ளிட்ட பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அபுதாபியில் அனைத்து அரசு சுகாதார சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துமனைகள் அனைத்திலும் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நேற்று நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை சுப்ரீம் கமிட்டி சார்பில் பைசர் பயோ என் டெக் என்ற கொரோனா தடுபூசியானது துபாயில் இலவசமாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment