நிலவில் எடுத்த பாறைகளுடன் சீன விண்கலம் பூமிக்கு புறப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

நிலவில் எடுத்த பாறைகளுடன் சீன விண்கலம் பூமிக்கு புறப்பட்டது

சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ம் திகதி ஒரு விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் அங்கு எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைகிறது.

நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ம் திகதி ஒரு விண்கலம் அனுப்பப்பட்டது.

‘சாங்கி-5’ என்ற இந்த விண்கலத்தின் ஒரு பகுதி இந்த மாதம் 1ம் திகதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்தது.

கடந்த 3ம் திகதி இந்த விண்கலம் நிலவு பரப்பில் இருந்து புறப்பட்டது. இது நிலவை சுற்றிக் கொண்டிருந்த விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

அந்த விண்கலத்தில் இருந்த 4 என்ஜின்கள் 22 நிமிடங்கள் இயக்கப்பட்டது. இதையடுத்து அது நேற்று (13) பூமியை நோக்கி திருப்பப்பட்டது.

இதையடுத்து சீனாவினர் கலத்தின் சுற்று வட்டப்பாதை பூமியை நோக்கி திரும்பியது. விரைவில் இந்த விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைகிறது.

ஏற்கனவே அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி அங்கிருந்து பாறைகள், மணல் போன்றவற்றை பூமிக்கு கொண்ட வந்து ஆய்வு செய்தன. இப்போது சீனா இந்த சானையை படைத்துள்ளது.

50 ஆண்டுகளுகு பிறகு இந்த சாதனையை சீனா நிறைவேற்றியுள்ளது. இந்த தகவலை சீன தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

No comments:

Post a Comment