'லக்சந்த செவன' குடியிருப்புத் தொகுதி விடுவிப்பு - திருகோணமலையில் இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

'லக்சந்த செவன' குடியிருப்புத் தொகுதி விடுவிப்பு - திருகோணமலையில் இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டது

சுமார் ஒரு மாதமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெல்லம்பிட்டி லக்சந்த செவன வீட்டுத் திட்டம், விடுவிக்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை 6.00 மணியிலிருந்து அவ்வீட்டுத் திட்டம் விடுவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 30ஆம் திகதி முதல் வெல்லம்பிட்டி, லக்சந்த செவன  தொடர்மாடி வீட்டுத் திட்டம் தனிமைப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, திருகோணமலை, அபயபுர மற்றும் தினநகர் ஆகிய பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment