சவூதி அரேபியாவின் செல்வாக்கு மிக்க இளவரசர் துர்கி அல் பைசால் பிராந்திய மாநாடு ஒன்றில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார். அதற்கு மாநாட்டில் இஸ்ரேல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக நீடிக்கும் அரபு நாடுகளின் புறக்கணிப்பை தளர்த்தி ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தி ஒரு சில மாதங்களிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த இராஜதந்திர உறவை பலஸ்தீனர்கள் ‘முதுகில் குத்தும் செயல்’ என கூறி வருகின்றனர்.
சவூதியின் முன்னாள் உளவுப் பிரிவுத் தலைவராக துர்கி அல் பைசால், வீடியோ கொன்பிரன்ஸ் முறையில் நடைபெறும் மாநாட்டிலேயே உரையாற்றி இருந்தார்.
அதில் அவர் வழக்கத்திற்கு மாறான அப்பாட்டமான சொற்பிரயோகங்களை பயன்படுத்தி இருந்தார். இஸ்ரேலை மேற்குலகின் காலனித்துவ சக்தி என்றும் பலஸ்தீனர்கள் மற்றும் அவர்களின் கிராமங்களை அழித்த வரலாற்றை கொண்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய நிர்வாகம் தமது விருப்பத்திற்கு ஏற்ப வீடுகளை தகர்ப்பதாகவும் விரும்பும்படி படுகொலைகளில் ஈடுபடுவதாகவும் கடுமையாக சாடினார்.
தொடர்ந்து இந்த மாநாட்டில் உரையாற்றிய இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கெபி அஷ்கெனாசி, இந்தக் கருத்துகளுக்கு வருத்தத்தை தெரிவித்தார்.
‘மனாமா மாநாட்டில் சவூதி பிரதிநிதியின் தவறான குற்றச்சாட்டுகள் பிராந்தியத்தில் தற்போது இடம்பெறும் மாற்றங்களின் உண்மையான நிலை அல்லது உற்சாகச் சூழலை பிரதிபலிக்கவில்லை’ என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment