முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக லண்டனில் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக லண்டனில் போராட்டம்

கொரோனா வைரஸினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு, எதிராக லண்டனில் நேற்று (சனிக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

லண்டனில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்தப் போராட்டம் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதில், லண்டனில் வாழும் கிறிஸ்தவ சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தனர்.

மேலும் இதன்போது இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதை இலங்கை அரசாங்கம உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் கோசமெழுப்பப்பட்டது.
எதிர்ப்பு வசனங்களையும் கோசங்களையும் எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கொரோனாவால் உயிரிழந்ததன் காரணமாக தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் படத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காண முடிந்தது.

இதேவேளை லண்டன் அரசாங்கம் இந்த விடயம் குறித்து தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

கட்டாயமாக உடல்கள் தகனம் செய்யப்படுவது முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஏனைய சமூகத்தினர் மீதும் ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்து லண்டன் கவனை ஈர்த்துள்ளது.

மனித உரிமை விவகாரங்களிற்கான அமைச்சரான தாரிக் அஹமட் பிரபு இலங்கை உயர்ஸ்தானிகருடன் நேரடியாக இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment