பங்களாதேஷின் புதிய உயர் ஸ்தானிகர் இலங்கை வந்தார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

பங்களாதேஷின் புதிய உயர் ஸ்தானிகர் இலங்கை வந்தார்

சில்மியா யூசுப்

பங்களாதேஷின் புதிய உயர் ஸ்தானிகர் தாரிக் எம்.டி.அரிபுல் இஸ்லாம் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இவர் எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நவம்பர் 28 ஆம் திகதி கொழும்புக்கு வருகை தந்த இவர் தற்போது கொழும்பில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இரண்டு வாரங்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

முன்னாள் பங்களாதேஷ் உயர் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமீதுல்லாவிற்கு பதிலாக இவர் தன் கடமையை பொறுப்பேற்க உள்ளார்.

தாரிக் எம்.டி அரிபுல் இஸ்லாம் தொழில் இராஜதந்திரம் மற்றும் 1998 இல் பங்களாதேஷ் வெளியுறவு சேவையில் சேர்ந்தார்.

இவர் தற்போதைய பதவியை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பங்களாதேஷின் நிரந்தர காரியாலத்தில் துணை நிரந்தர பிரதிநிதியாக 2016 முதல் 2020ம் ஆண்டு வரை கடமையாற்றினார்.

முதல் செயலாளர் ஆலோசகராக இருந்த அதே காரியாலயத்தில் (2005-2009) வரை அவர் முந்தைய பணியைக் கொண்டிருந்தார். 

பின்னர் இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள பங்களாதேஷ் துணை உயர் ஸ்தானிகராலயத்தில் (2009-2012) ஆண்டு ஆலோசகராக பணியாற்றினார். 

மேலும் இவர் பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சகத்தில் பொது இயக்குனராக (தெற்காசியா பகுதியில் பணியாற்றினார், அதற்கு முன்னர் இயக்குனர் (வெளியுறவு அமைச்சர் அலுவலகம்) மற்றும் பணியாளர் பிரிவு மற்றும் வெளியுறவு செயலாளர் உள்ளிட்ட பல்வேறு திறன்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment