ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் தியசிரிகம பகுதியில் லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலையிலிருந்து மஸ்கெலியா சென்ற லொறியே இன்று (13) காலை 07.30 மணியளவில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்ளாகியுள்ளது.
மஸ்கெலியா வர்த்தக நிலையங்களுக்கு பொருட்கள் ஏற்றிச் செல்கையில் சாரதிக்கு நித்திரை வந்ததாலே கட்டுப்பாட்டை மீறி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் லொறியின் சாரதி தெய்வாதீனமாக காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.
லொறியும் அதிலிருந்த பொருட்கள் கடுமையாக சேதமாகியுள்ளன. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
மலையக நிருபர் சதீஸ்குமார்
No comments:
Post a Comment