பிறந்து 20 நாட்களேயான சிசு கொரோனா தொற்றால் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 8, 2020

பிறந்து 20 நாட்களேயான சிசு கொரோனா தொற்றால் உயிரிழப்பு

COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட, பிறந்து 20 நாட்களேயான சிசு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது.

கொழும்பு-15 முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த சிசு ஒன்றே COVID-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜயசூரிய குறிப்பிட்டார்.

கொரானா தொற்றுக்குள்ளான குறித்த சிசு இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிசுவின் தாய்க்கும் தந்தைக்கும் COVID-19 தொற்று ஏற்படவில்லை என சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜயசூரிய தெரிவித்தார்.

No comments:

Post a Comment