கொவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் நிலவுகின்றது, நோய் தொற்றுக்குள்ளான நபர்கள் நோயை மறைப்பதற்கு முயற்சிக்கின்றனர். கொவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் இவ்வாறான நடவடிக்கையினால் சிரமமான நிலை எதிர்நோக்கப்படுகின்றது. இந்த நிமையை தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயின், மூலோபாய திட்டம் தேவை என்று ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்று நோய் மற்றும் கொவிட் நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் திருமதி. சுதர்ஷனி பெர்ணான்டோபுல்லே தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொடர்பான பகுப்பாய்வு குழுவினருடனான சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இராஜாங்க அமைச்சரின் தலைமையில் இன்று (08) சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் சமூகம் குரோத நோக்கத்துடன் நோக்குவதாகவும், நோயாளரை நிராகரிக்கும் தன்மைகூட இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிமையை தவிர்த்துக் கொள்வதற்கு பொதுமக்களுக்கு அடிக்கடி தெளிவுப்படுத்துவது அவசியமாகும். இதற்காக ஊடகங்கள் மூலம் தேவையான தெளிவுப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாளாந்தம் பி.சி.ஆர் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் இதில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் அந்த குழுவினரிடம் இராஜாங்க அமைச்சர் கேட்டறிந்தார்.
கொவிட் தொற்றுக்குள்ளான பிரதேசங்களில் அம்புலன்ஸ் வண்டிகளை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்காக நோயாளர்கள் இல்லாத பிரதேசங்களில் உள்ள அம்புலன்ஸ் வண்டிகளை பயன்படுத்துவது குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவகைளின் சடலத்தை தகனம் செய்யும் போது பொருளாதார பிரச்சினை உள்ளவர்களின் தகன நடவடிக்கைகளுக்கான செலவை அவர்கள் சார்ந்த உறவினர்களிடம் பார்க்காது அரசாங்கம் செலவில் அதனை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
கொழும்பு மாநகர எல்லைப்பகுதிக்குள் கொவிட்-19 தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் பங்களிப்பை வழங்கும் முறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கொவிட் கொத்தணி தொடர்பில் செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும், எதிர்வரும் பண்டிகை காலத்துக்காக ஏற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்வது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக நிறுவன பிரதானிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜென்ரல் விசேட வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்க, ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்று நோய் மற்றும் கொவிட்-19 நோயை கட்டுப்படுத்துவதற்கான விசேட வைத்தியர் அமல் ஹர்ஷா டீ சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன, தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர, அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment