தலவாக்கலை லிந்துலை நகர சபைத் தலைவர், செயலாளர், ஊடகவியலாளர் உட்பட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

தலவாக்கலை லிந்துலை நகர சபைத் தலைவர், செயலாளர், ஊடகவியலாளர் உட்பட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

தலாவாக்கலை லிந்துலை நகர சபைத் தலைவர், செயலாளர், ஊழியர்கள் 10 பேர் பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 14 பேர் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொதுச் சுகாதார காரியாலய வைத்திய அதிகாரி எம்.கணேஷ் தெரிவித்தார்.

அக்கரபத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு தொற்று உறுதி செய்யப்படட்தையடுத்து அவரோடு தொடர்பைப் பேணியவர்களை அடையாளம் கண்டு 22/12/2020 மாலை மேற்படி 14 பேரும் சுய தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி அக்கரப்பத்தனை பிரதேச சபைத் தலைவர் சுய தனிமைப்படுத்தப்பட்டு அன்றையதினம் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுய தனிமைப்படுத்தப்ட்ட அவர் 17, 19 ஆம் திகதிகளில் கண்டி பொல்கொல்ல மற்றும் தலவாக்கலை பகுதியில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் 20/12/2020 கிடைக்கப் பெற்ற பி.சி.ஆர் அறிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் 21ஆம் திகதி மேற்கொண்ட இரண்டாவது பி.சி.ஆர் பரிசோனையிலும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, தொற்றுக்குள்ளான பிரதேச சபைத் தலைவருடன் தொடர்பைப் பேணியவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதுடன் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர், செயலாளர் மற்றும் ஊழியகள் 10 பேர் அடங்கலாக 12 பேரும் செய்தி சேகரிக்கச் சென்ற இரண்டு பிராந்திய ஊடகவியலாளர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொட்டகலை பொது சுகாதார காரியாலய வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.கணேசன் இதைத் தெரிவித்தார்.

மேலும் அட்டன் டிக்கோயா நகர சபை, அம்பகமுவ, கொட்டகலை, மஸ்கெலியா, நோர்வூட், நுவரெலியா பிரதேச சபைத் தலைவர்கள் 21 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment