2021ம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வை ஜனவரி மாதம் 05ஆம் திகதி நடாத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் குழு நேற்று (08) தீர்மானித்ததாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் விடயம் என்வென்பது தொடர்பில் மீண்டுமொரு முறை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடி முடிவெடுக்கும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக தஸநாயக்க தெரிவித்தார்.
இதற்கமைய 18 ஆக காணப்படும் குறித்த குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிக்கப்படவிருப்பதுடன், ஆளுங்கட்சி சார்பில் ஒரு உறுப்பினரும், எதிர்க்கட்சியின் சார்பில் இரண்டு உறுப்பினர்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இக்கூட்டத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன, ஆளுங்கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பெர்னாந்து, அமைச்சர்களான விமல் வீரவங்ச, பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக, மஹிந்த சமரசிங்க, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment