சிகிரியா சுற்றுலா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த அதிகாரி நேற்று (சனிக்கிழமை) தனது கடமை நேரத்தில், கண்காணிப்பு மேற்பார்வைகளை செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment