அரசாங்கம் ஏனையவர்களின் கருத்துக்களை செவிமடுக்க தயாராகயில்லை - ஹரினி அமரசூரிய - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

அரசாங்கம் ஏனையவர்களின் கருத்துக்களை செவிமடுக்க தயாராகயில்லை - ஹரினி அமரசூரிய

கொரோனா வைரசிற்கு பொதுமக்களை அரசாங்கம் குற்றம் சாட்டுவது அரசாங்கத்தினதும் அதன் தலைமைத்துவத்தினதும் அனுபவமின்மையை வெளிப்படுத்தியுள்ளது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது

ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா வைரஸ் பரவல் என்பது சாதாரண விடயமில்லை தனியொரு குழுவினரால் இதற்கு தீர்வை காணமுடியாது அரசாங்கத்திற்கு அனைவரினதும் ஆதரவு தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கம் ஏனையவர்களின் கருத்துக்களை செவிமடுக்க தயாரில்லை, இவ்வாறான நெருக்கடியான தருணத்தில் ஏனையவர்களின் கருத்துக்களை செவிமடுத்து செயற்படுவது அவசியமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே மிகச்சிறந்த தலைமைத்துவம் எனப்படும் ஆனால் துரதிஸ்டவசமாக நாங்கள் எங்கள் கருத்துக்களை யோசனைகளை முன்வைக்கும் அவர்கள் தங்களை காயப்படுத்தியதாக கருதுகின்றனர் தனிப்பட்ட விடயமாக கருதுகின்றனர் எனவும்; ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அவர்கள் மக்கள் மீதே முழுமையாக குற்றம் சாட்டுகின்றனர் இது அரசாங்கத்தின் அரச தலைவர்களின் அனுபவமின்மையை வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தனது அதிகாரங்கள் குறித்து அச்சப்படுகின்றது, வலுவான தலைமைத்துவம் இதனை செய்யாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment