தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கால பகுதியில் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தக் கூடிய அரச நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பிலான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள் உள்ளிட்ட 84 நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
பதில் பொலிஸ் மா அதிபர் C.D. விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், நீதி அமைச்சு மற்றும் அனைத்து ஊடக நிறுவனங்களில் கடமையாற்றுவோர் தமது அலுவலக அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment