நகர திட்டமிடல் அதிகார சபையின் அதிகாரிகள் நிந்தவூருக்கு கள விஜயம் : நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்க முயற்சி - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

நகர திட்டமிடல் அதிகார சபையின் அதிகாரிகள் நிந்தவூருக்கு கள விஜயம் : நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்க முயற்சி

நூருல் ஹுதா உமர் 

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசீம் அவர்களின் அழைப்பை ஏற்று நகர திட்டமிடல் அதிகார சபையின் மாவட்ட பிரதிப் பணிப்பாளரும் அதன் ஏனைய அதிகாரிகள் மற்றும் கட்டட திணைக்கள பொறியியலாளர்களும் மற்றும் பல உயர் அதிகாரிகளும் அடங்கிய குழு ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை நிந்தவூருக்கான கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இவ்விஜயத்தின் போது நிந்தவூர் கலாசார மண்டபம் மற்றும் கடற்கரை பூங்கா என்பவற்றையும் நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் அரசிடம் முன்வைத்த செயற்திட்டங்களை அரசு துரிதப்படுத்தும் நோக்கிலேயே தங்களது களவிஜயம் அமைந்திருந்ததாகவும், இச்செயற்திட்டங்களை உள்ளடக்கிய மொறட்டுவ பல்கலைக்கழகத்தினால் நிந்தவூருக்காக வரையப்பட்ட பிரதான திட்ட வரைவையும் சேர்த்து அரச வர்த்தமானியில் பிரசுரிக்க இருப்பதாக இதன் போது கருத்துத் தெரிவித்த அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment