லங்கா ப்ரீமியர் லீக் : கொழும்பு கிங்ஸ் அணியின் பிரதம பயிற்றுநருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

லங்கா ப்ரீமியர் லீக் : கொழும்பு கிங்ஸ் அணியின் பிரதம பயிற்றுநருக்கு கொரோனா

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள கொழும்பு கிங்ஸ் அணியின் பிரதம பயிற்றுநரான இங்கிலாந்தின் கபீர் அலிக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால், லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கபீர் அலி பங்கேற்பதில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கிங்ஸ் அணியின் பயிற்றுநராக இதற்கு முன்னர் ஒப்பந்தமாகியிருந்த அவுஸ்திரேலியாவின் Dav Whatmore அந்த பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.

இதனையடுத்து, கொழும்பு கிங்ஸ் அணியின் பிரதான பயிற்றுநராக இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கபீர் அலி பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad