இலங்கையில் கொரோனா தொற்று சமூகமயமாக்கப்படவில்லை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

இலங்கையில் கொரோனா தொற்று சமூகமயமாக்கப்படவில்லை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

நாட்டில் கொரோனா தொற்று சமூகமயமாக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை இன்னும் கொரோனா தொற்று மூன்றாம் கட்டத்தில் உள்ளது என்றும் நிலைமையைக் கட்டுப்படுத்துவது கடினம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு மற்றும் தொற்று நோயியல் பிரிவின் அளவுகோல்களின்படி, வைரஸ் சமூகமயமாக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

வைரஸின் சமூக மயமாக்கல் என்பது எங்கிருந்து தோன்றியது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களாக காணப்படுவதாகவும், குறித்த கொத்தணியில் முதலாவது கட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டின் பொருளாதார நிலைமையைப் பொறுத்தவரை, நாடு முழுமையாக மூடும் சாத்தியம் இல்லை என்றும், நாட்டை முடக்காது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடடிவக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment