நிவர் புயலின் பாதிப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

நிவர் புயலின் பாதிப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்

நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்படாத போதிலும் எழுவைதீவு பகுதியில் சுமார் மூன்று வீடுகள் பாதிப்படைந்துள்ளன.

இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த விடயத்தினை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கை தொடர்பாக ஆராயுமாறு ஊர்காவற்துறை பிரதேச சபை தலைவர் ஜெயக்காந்தனுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபைத் தலைவர், நிலமைகளை ஆராய்ந்ததுடன் அவை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிராந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment