தாஜ் சமுத்திராவின் நான்கு ஊழியர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள தாஜ் சமுத்திரா நிர்வாகம் அவர்கள் அனைவரும் நோய் அறிகுறிகள் அற்றவர்கள் எந்த வித அறிகுறிகளையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது.
வைரசினை கண்காணிப்பதற்கான அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நாங்கள் அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
நாங்கள் தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருகின்றோம் மேலும் ஆபத்துக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுகின்றோம் என தாஜ் சமுத்திரா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment