மேல் மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (09) அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த நவம்பர் 02ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படவிருந்த ஊரடங்குச் சட்டம், நவம்பர் 09ஆம் திகதி வரை மேலும் 7 நாட்களுக்கு நீடிக்கப்பட்டதோடு, நாளை இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
ஆயினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பொலிஸ் பிரிவுகள், மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு சில வீட்டுத்திட்ட/தொடர்மாடி குடியிருப்புகள் கொவிட்-19 பரவல் தொடர்பிலான எச்சரிக்கை மிக்க பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதனால், குறித்த வீடுகளில் வாழ்பவர்கள், வீடுகளுக்கிடையே செல்வதை தவிர்த்து, தங்களது வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்மாடிகள்
மெத்சந்த செவண - மோதறை
மிஹிஜய செவண - மோதறை
ரன்மிண செவண - மோதறை
சிறிசந்த உயன - தெமட்டகொடை
மாளிகாவத்தை தேசிய வீடமைப்புத் திட்டம்
மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் வருமாறு
கொழும்பு மாவட்டம்
மட்டக்குளி பொலிஸ் பிரிவு
மோதறை பொலிஸ் பிரிவு
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு
கரையோர பொலிஸ் பிரிவு
ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு
மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு
தெமட்டகொடை பொலிஸ் பிரிவு
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவு
பொரளை பொலிஸ் பிரிவு
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு
கம்பஹா மாவட்டம்
வத்தளை பொலிஸ் பிரிவு
பேலியகொடை பொலிஸ் பிரிவு
கடவத்த பொலிஸ் பிரிவு
ராகமை பொலிஸ் பிரிவு
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
பமுணுவ பொலிஸ் பிரிவு
ஜா-எல பொலிஸ் பிரிவு
சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவு
களுத்துறை மாவட்டம்
ஹொரண பொலிஸ் பிரிவு
இங்கிரிய பொலிஸ் பிரிவு
வேகட மேற்கு கிராம சேவகர் பிரிவு
குருணாகல் மாவட்டம்
குருணாகல் நகர எல்லை
குளியாபிட்டி பொலிஸ் பிரிவு
கேகாலை மாவட்டம்
மாவனல்லை பொலிஸ் பிரிவு
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவு
No comments:
Post a Comment