சிலோன் மீடியா போரத்தின் மேலங்கி அறிமுக நிகழ்வும் செயற்குழு உறுப்பினர்களின் சந்திப்பும் !! - News View

About Us

About Us

Breaking

Saturday, November 14, 2020

சிலோன் மீடியா போரத்தின் மேலங்கி அறிமுக நிகழ்வும் செயற்குழு உறுப்பினர்களின் சந்திப்பும் !!

அபு ஹின்ஸா & சர்ஜுன் லாபீர்

சிலோன் மீடியா போரத்தின் மேலங்கி அறிமுக நிகழ்வும் செயற்குழு உறுப்பினர்களின் சந்திப்பும் இன்று (14) காலை அமைப்பின் உத்தியோகபூர்வ சாய்ந்தமருது அலுவலகத்தில் அமைப்பின் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீட் தலைமையில் சுகாதார நடைமுறைகளை பேணி நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிலோன் மீடியா போரத்தின் மேலங்கிக்கான அனுசரணையாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டு சிலோன் மீடியா போரத்தின் மேலங்கியை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். 

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது உரையில் சமகாலத்தில் இலங்கை முஸ்லிங்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் ஊடகங்களின் பங்களிப்புக்கள் பற்றி பேசியதுடன் இலங்கை ஊடகங்களின் போக்குகள், செய்தித்தன்மைகள், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஊடகவியலாளர்களின் தியாகங்கள் தொடர்பில் சிலோன் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களுடன் விரிவாக கலந்துரையாடினார்.

மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்க்ளின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ பாபா, முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மிரசாஹிப் அவர்களின் பிரத்தியேக செயலாளர் எம். றிம்ஸாத், சிலோன் மீடியா போரத்தின் தேசிய பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம். முஜாஹித், தேசிய பொருளாளர் நூருல் ஹுதா உமர், பிரதித் தலைவர்கள், பிரதிச்செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment