சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கமைவாக ரயில் சேவைகள் ஆரம்பம் - தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் நிறுத்தப்படாது - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கமைவாக ரயில் சேவைகள் ஆரம்பம் - தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் நிறுத்தப்படாது

நாளை தொடக்கம் சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கமைவாக ரயில் சேவைகள் இடம்பெறவிருப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக 2020.11.23 ஆம் திகதி தொடக்கம் காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட அலுவலக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் ஏ.டீ.பி. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த ரயில்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பொலிஸ் வலய பிரதேசங்களிற்குள் நிறுத்தாது செல்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதான புகையிரத பாதை - கொழும்பு கோட்டை தொடக்கம் பொல்கஹவல / ரம்புக்கணை / கண்டி / கனேவத்த / மஹவ வரை சேவையில் ஈடுபடுவதுடன், கீழ் குறிப்பிடப்பட்ட எந்தவொரு புகையிரத நிலையங்களிலும் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது.

மருதானை புகையிரத நிலையம்
தெமட்டகொட உப ரயில் நிலையம்
களனி ரயில் நிலையம்
வனவாசல உப ரயில் நிலையம்
ஹொரப்பே உப ரயில் நிலையம்
ராகம ரயில் நிலையம்
வல்பொல உப ரயில் நிலையம்
பட்டுவத்த உப ரயில் நிலையம்

சிலாபம் ரயில் பாதை - கொழும்பு கோட்டை தொடக்கம் சிலாபம் / புத்தளம் வரை பயணம் செய்வதுடன், கீழ் குறிப்பிடப்பட்ட எந்தவொரு ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது.

மருதானை ரயில் நிலையம்
தெமட்டகொட உப ரயில் நிலையம்
களனி ரயில் நிலையம்
வனவாசல உப ரயில் நிலையம்
ஹொரப்பே உப ரயில் நிலையம்
ராகம ரயில் நிலையம்
பேரலன்த உப ரயில் நிலையம்
குரண ரயில் நிலையம்
நீர்கொழும்பு ரயில் நிலையம்
கட்டுவ உப ரயில் நிலையம்

களணிவெளி ரயில் பாதை - கொழும்பு கோட்டை தொடக்கம் கொஸ்கம / அவிஸ்ஸாவெல வரை சேவையில் ஈடுபடுவதுடன், கீழ் குறிப்பிடப்பட்ட எந்தவொரு ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது.

மருதானை ரயில் நிலையம்
பேஸ்லைன் வீதி ரயில் நிலையம்

கரையோரப் ரயில் பாதை - கொழும்பு கோட்டை தொடக்கம் பானந்துறை / களுத்தறை தெற்கு / அளுத்கம / ஹிக்கடுவ / காலி / மாத்தறை / பெலிஅத்த வரையிலான ரயில் நிலையங்கள் வரை பயணிக்கும்.

அனைத்து ரயில் பயணிகளும், சுகாதாரப் பிரிவின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முற்றிலும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment