மூதூரில் 41,000 ரூபா கள்ள நோட்டுகளை வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல் - News View

Breaking

Post Top Ad

Saturday, November 21, 2020

மூதூரில் 41,000 ரூபா கள்ள நோட்டுகளை வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 41,000 ரூபா கள்ள நோட்டுகளை வைத்திருந்த இருவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் மஹ்ரூப் இன்று (21) உத்தரவிட்டார்.

கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 27 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூதூர் பெரிய பாலம் பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதியொன்றில் ​வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூதூர் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐந்தாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் ஏழும், ஆயிரம் கள்ள நோட்டுகள் ஐந்தும், ஐந்நூறு கள்ள நோட்டுகள் இரண்டும் வைத்திருந்த நிலையில் நேற்று (20) இரவு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக மூதூர் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய கணினி, தொலைநகர், அச்சுப்பொறி மற்றும் அச்சு பதிப்பு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment

Post Bottom Ad