எத்தியோப்பிய யுத்த வலயத்தில் சிக்கிய 38 இலங்கையர் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

எத்தியோப்பிய யுத்த வலயத்தில் சிக்கிய 38 இலங்கையர் மீட்பு

எத்தியோப்பியாவின் டைக்ரே பகுதியிலுள்ள யுத்த வலயத்திலிருந்து 38 இலங்கையர்கள் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எத்தியோப்பியாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளியுறவு அமைச்சகம் மற்றும் எத்தியோப்பியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கை முன்னடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 38 இலங்கையர்களும், பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் டைக்ரேயில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் படையினரால் வெளியேற்றப்பட்டு தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

எத்தியோப்பியாவில் ஆடைத் தொழிலில் பணி புரியும் இலங்கை நாட்டினர் அனைவரும் விரைவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.

டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியை (TPLF) சேர்ந்த பிராந்தியப் படைகள் ஒரு கூட்டாட்சி இராணுவத் தளத்தைத் தாக்கியதை அடுத்து, எத்தியோப்பியா அரசு 2020 நவம்பர் 04 அன்று டைக்ரே பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment