இலங்கையில் கொரோனா தொற்றால் 21ஆவது மரணம் பதிவு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 1, 2020

இலங்கையில் கொரோனா தொற்றால் 21ஆவது மரணம் பதிவு

இலங்கையில் கொரோனா தொற்றிய 21ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று (31) வெலிசறை, மார்பு நோய் சிகிச்சைப் பிரிவில் வைத்து மரணமடைந்த நபருக்கு மேற்கொண்ட PCR சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மஹர பிரதேசத்தைச் சேர்ந்த, 40 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர், அதியுயர் இரத்த அழுத்தம் மற்றும் சுவாசத் தொகுதியில் தொற்று நிலை பிரச்சினை காரணமாக, கடந்த 23ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது PCR பரிசோதனையில், அவருக்கு தொற்று இருப்பது அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, நேற்று (31) மரணமடைந்த அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரதேப் பரிசோதனையில் மேற்கொண்ட இரண்டாவது PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றாளர் என கண்டறியப்பட்டதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தற்போது அறிவித்துள்ளது.

இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 31ஆம் திகதி இலங்கையில் 20ஆவது கொரோனா மரணம் பதிவாகியிருந்தது.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமான மரணங்கள்

1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.

3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்

7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

11ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.

12ஆவது மரணம், ஓகஸ்ட் 23ஆம் திகதி, 47 வயதான, இந்தியாவிலிருந்து வந்து IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்.

13ஆவது மரணம், செப். 14ஆம் திகதி, 60 வயதான, பஹ்ரைனிலிருந்து வந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

14ஆவது மரணம், ஒக்டோபர் 22ஆம் திகதி, 50 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.

15ஆவது மரணம், ஒக்டோபர் 24ஆம் திகதி, 56 வயதான, குளியாபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

16ஆவது மரணம், ஒக்டோபர் 25ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 02 ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.

17ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 41 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜா-எலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

18ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 19 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

19ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 87 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொம்பனித்தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

20ஆவது மரணம், ஒக்டோபர் 30ஆம் திகதி, 54 வயதான, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.

21ஆவது மரணம், ஒக்டோபர் 31ஆம் திகதி, 40 வயதான, வெலிசறை மார்பு நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, மஹர பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 10,856 பேரில் தற்போது 5,930 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 4,905 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 21 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 405 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment