தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் - 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1693 மில்லியனாக அதிகரித்துள்ளது.
Seylan Bank PLC 5,000,000 ரூபாவையும், தேசிய நீர் வழங்கள், வடிகாலமைப்பு சபை 15,136,647.99 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளன. இதற்கான காசோலைகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
Finlays Colombo Limited 10,000,000 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளதுடன், அதற்கான காசோலை கிஹான் எஸ்.ஜயசிங்கவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,693,475,780.01 ரூபாவாகும்.
உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

No comments:
Post a Comment