கட்டாரிலிருந்து 17 பேர் இலங்கையை வந்தடைந்தனர் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

கட்டாரிலிருந்து 17 பேர் இலங்கையை வந்தடைந்தனர்

இன்று (08) காலை கட்டாரின், டோஹாவிலிருந்து 17 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டாரின் டோஹா நகரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம் குறித்த 17 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு இலங்கையை வந்தடைந்த அனைவரும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று (04), அபுதாபியிலிருந்து EY 664 எனும் விமானம் மூலம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரிலிருந்து ஒருவரும், கட்டாரின், டோஹா நகரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம் 18 பேரும், இந்தியாவின் சென்னை நகரிலிருந்து 11 பேரும் என 30 பேர் இலங்கையை வந்தடைந்ததாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வருகை தந்த அனைவரும், முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad