இலங்கையை வந்தடைந்தது சீனாவின் உயர்மட்ட தூதுக்குழு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

இலங்கையை வந்தடைந்தது சீனாவின் உயர்மட்ட தூதுக்குழு

சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 26 பேர் கொண்ட சீன அரசாங்கத்தின் தூதுக்குழுவும், பல உயர் மட்ட அரசாங்க அதிகாரிகளும் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர். 

முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பணியக உறுப்பினருமான யாங் ஜீச்சியே இக்குழுவுக்கு தலைமை தாங்குகிறார். 

சீனாவின் பீஜிங் ஏயர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பி.ஜே.என்-099 என்ற சிறப்பு விமானத்திலேயே இந்த தூதுக் குழுவானது இன்று இரவு 7.40 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 

உலகளாவிய கொரோனா தொற்று நோய்க்குப் பின்னர் தெற்காசிய பிராந்தியத்தில் இது முதல் சீன விஜயம் என்பதால், இந்த பயணம் உலகளாவிய தொற்று நோயை எதிர்த்துப் போராடுவது மற்றும் பொருளாதார உறவுகளின் மறுமலர்ச்சி ஆகிய துறைகளில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று வருகை தரும் சீனக் குழு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment