மன்னார் - பட்டித்தோட்டம், பெரியகடை முடக்கம் : அங்கு மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

மன்னார் - பட்டித்தோட்டம், பெரியகடை முடக்கம் : அங்கு மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று

மன்னாரில் கொரோனா தொற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மன்னார் நகர் பகுதிகளான பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய இரு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகாள முடக்கபட்டுள்ளன.

கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த. வினோதனும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அண்மையில் மன்னார் பட்டித்தோட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டட வேலைக்காக, வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்த கட்டட தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்றுநோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரோடு நேரடியாக தொடர்பு கொண்டதாக தெரிவிக்கபடும் 42 பேர் முதற்கட்டமாக PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டிருந்தனர்.

இதன் பிரகாரம் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளதாக அறிக்கைகள் வெளியிடபட்டுள்ளன. அனுப்பப்பட்ட 42 PCR பரிசோதனையில் 28 பேரின் அறிக்கைகளே வெளியிடபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

அத்துடன் குறித்த 28 நபர்களில் கொரோனா தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்ட 5 நோயாளிகளில் ஒருவர் கட்டட பகுதி தொகுதியிலிருந்து மன்னார் நகர் பகுதிக்குள் இனம்காணப்பட்டதைத் தெடர்ந்து மன்னார் - பெரியகடை, பட்டித்தோட்டம் ஆகிய இரு பிரிவுகளையும் முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் நோயாளியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டவர்களை மேலும் இனம் கண்டு, PCR பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

இதன் பிரகாரம் இதுவரைக்கும் 90 நபர்களின் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அடுத்த கட்டமாக 150 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தபடவிருப்பதாக தெரிவிக்க ப்படுகிறது

இதுவரை இவ்விடயம் தொடர்பில் 93 பேரின் PCR பரிசோதனை மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(தலைமன்னார் விஷேட நிருபர் - வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment